/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
25 வயது கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு
/
25 வயது கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு
ADDED : மே 24, 2025 11:02 PM
பெலகாவி: பெலகாவியில் 25 வயது கர்ப்பிணி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் நேற்று முன்தினம் ஒன்பது மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெலகாவி எல்லுார் பகுதியை சேர்ந்த 25 வயது கர்ப்பிணி, சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள கே.எல்.இ., மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது, கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதே சமயம், முதல்வர் சித்தராமையாவும் நேற்று நடந்த பொது நிகழ்ச்சிகளில், முகக்கவசத்துடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.