சுற்றுச்சூழலை மேம்படுத்த 25,000 மரக்கன்று நடப்படும்
சுற்றுச்சூழலை மேம்படுத்த 25,000 மரக்கன்று நடப்படும்
ADDED : மார் 29, 2026 03:40 AM

ஏரிகள் தெற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆறு ஏரிகள் மேம்படுத்தப்படும். ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பேகூர், மடிவாலா ஏரிகள் சுற்றுலா நோக்கில் மேம் படுத்தப்படும்.
கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகளில் துாய்மையான குடிநீர் வழங்க வழி செய்யப்படும்.
அரசு பள்ளி, கல்லுாரிகளில் மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி வளாகங்களில் பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படும். 'ஸ்மார்ட்' வகுப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
வனம் சுற்றுச்சூழலை மேம்படுத்த, கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து 25,000 மரக்கன்றுகள் நடப்படும் . ஏரிகளின் கரையோரங்களில் 25,000 மூங்கில் மரங்கள் நடப்படும்.ஆபத்தான நிலையில் உள்ள காய்ந்த மரங்கள் அகற்றப்படும்.
தோட்டக்கலை பசுமை பெங்களூரு திட்டத்தின் கீழ் எட்டு பூங்காக்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
சுகாதாரம் ஈஜிபுராவில் 18.96 கோடி மதிப்பில், 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும். 13.03 கோடி மதிப்பில் 25 நகர்ப்புற சுகாதார மையங்கள்; 49 நம்ம கிளினிக்குகள் நிறுவப்படும்.
சாலையோரங்களில் ஹோட்டல் வைத்திருக்கும் உரிமையாளர்கள், ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.
இந்திரா உணவகங்களின் 'மெனு'வில் கூடுதலாக உணவு வகைகள் சேர்க்கப்படும். கொசுவை ஒழிக்க 8.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
