/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
16வது மாடியில் இருந்து குதித்து 26 வயது இன்ஜினியர் தற்கொலை
/
16வது மாடியில் இருந்து குதித்து 26 வயது இன்ஜினியர் தற்கொலை
16வது மாடியில் இருந்து குதித்து 26 வயது இன்ஜினியர் தற்கொலை
16வது மாடியில் இருந்து குதித்து 26 வயது இன்ஜினியர் தற்கொலை
ADDED : ஜன 08, 2026 05:52 AM

பாகல்குண்டே: மன நல பிரச்னையால் பாதிக்கப்பட்ட எலக்ட்ரானிக் இன்ஜினியர், 16வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு பாகல்குண்டே ஷெட்டிஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில், மங்களூரை சேர்ந்த கிஷோர் - ஜெயஸ்ரீ தம்பதி வசிக்கின்றனர். இவர்களின் மகன் நிக் ஷெப் பங்கேரா, 26. ஐரோப்பாவில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தார். அங்கேயே அவருக்கு வேலை கிடைத்தது. வீட்டில் இருந்தே வேலை செய்தார். கடந்த மாதம் பெங்களூரு வந்தார்.
இவர், 'ஸ்கிசோப்ரினியா' எனும் எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டு செயல்படும் மன நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார். எந்நேரம் பார்த்தாலும் மன அழுத்தத்திலேயே இருந்து உள்ளார். கடந்த 30ம் தேதி தந்தையுடன் சண்டை போட்டு, அவரை தாக்கவும் முயன்று உள்ளார்.
மன அமைதிக்காக, மகனை ஹெசருகட்டாவில் உள்ள மடத்தில், பெற்றோர் அனுமதித்தனர். நேற்று காலை மடத்தில் இருந்து வீடு திரும்பிய நிக் ஷெப் தன் வீட்டிற்கு செல்லாமல், 16வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் சொந்த ஊரான மங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மன நல பிரச்னையால் பாதிக்கப்பட்டதால் மகன் தற்கொலை செய்ததாக தந்தை அளித்த புகாரில், பாகல்குண்டே போலீசார் விசாரிக்கின்றனர். வேறு காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

