/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உள்ளாட்சி தேர்தல் ம.ஜ.த., கூட்டணிக்கு பா.ஜ.,வில் எதிர்ப்பு
/
உள்ளாட்சி தேர்தல் ம.ஜ.த., கூட்டணிக்கு பா.ஜ.,வில் எதிர்ப்பு
உள்ளாட்சி தேர்தல் ம.ஜ.த., கூட்டணிக்கு பா.ஜ.,வில் எதிர்ப்பு
உள்ளாட்சி தேர்தல் ம.ஜ.த., கூட்டணிக்கு பா.ஜ.,வில் எதிர்ப்பு
ADDED : ஜன 08, 2026 05:52 AM
மாண்டியா: உள்ளாட்சி தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி வை க்க, பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தனியாக போட்டியிட்டால் நிறைய இடங்களில் வெற்றி பெறலாம் என்று தலைவர்கள் கூறி உள்ளனர்.
கர்நாடகாவில், 2023 சட்டசபை தேர்தலில் மாநில கட்சியான ம.ஜ.த., படுதோல்வி அடைந்தது. இதையடுத்து பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தனர். இந்த கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றது.
இனி அனைத்து தேர்தலையும் ஒன்றாகவே சந்திப்போம் என்று கூறி இருந்தனர். ஆனால் கடந்த மாதம் ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, 'கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம்' என்று அறிவித்து இருந்தார். அவரது கருத்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மாண்டியா மாவட்ட பா.ஜ., தலைவர்களான முன்னாள் எம்.பி., சுமலதா, முன்னாள் அமைச்சர் நாராயண கவுடா, மாவட்ட பா.ஜ., தலைவர் சச்சிதானந்தா ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், 'உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக, தேவகவுடா அறிவித்து விட்டார். இனி அவர்களே கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று கூறினாலும், பா.ஜ., மேலிடம் ஏற்க கூடாது.
'தனியாக போட்டியிட்டால் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். மாண்டியாவில் கட்சி வளர்ச்சி அடைந்து உள்ளது.
'லோ க்சபா தேர்தலுக்கு முன்பு, மாண்டியாவில் வெற்றி பெற குமாரசாமி அனைவரின் உதவியும் நாடினார். தேர்தலில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சர் ஆன பின், மாண்டியா பா.ஜ., தலைவர்களை புறக்கணிக்கிறார்' என்றனர்.

