sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மைசூரு நகரம், கிராமப்புறங்களில் 5 ஆண்டில் 2,667 பேர் தற்கொலை

/

மைசூரு நகரம், கிராமப்புறங்களில் 5 ஆண்டில் 2,667 பேர் தற்கொலை

மைசூரு நகரம், கிராமப்புறங்களில் 5 ஆண்டில் 2,667 பேர் தற்கொலை

மைசூரு நகரம், கிராமப்புறங்களில் 5 ஆண்டில் 2,667 பேர் தற்கொலை


ADDED : அக் 21, 2025 04:16 AM

Google News

ADDED : அக் 21, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 2,667 பேர் தற்கொலை செய்து கொண்டதாக, என்.சி.ஆர்.பி., அறிக்கை தெரிவித்துள்ளது.

என்.சி.ஆர்.பி., எனும் தேசிய குற்றப்பதிவு பணியகம் அறிக்கையை, மைசூரு பல்கலைக்கழகத்தின் சமூக உள்ளடக்க மையத்தின் இணை பேராசிரியர் டாக்டர் நஞ்சுண்டா, மஹாராஜா கல்லுாரி உளவியல் துறை பேராசிரியர் லான்சி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து பேராசிரியர் லான்சி கூறியதாவது: மைசூரு நகரம், கிராமப்புறங்களில் 2020 முதல் 2024 வரை கடன், வேலை இல்லாதது, குடும்ப பிரச்னை, சமூக அவமானம், நிதி நெருக்கடி உட்பட 18 காரணங்களால் 2,667 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்களில் 90 சதவீதம் பேர், 30 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள். காதல் தோல்வி, தொழில் தொடர்பான மன அழுத்தம், தவறான உறவு போன்றவற்றால், 18 முதல் 30 வயதுக்குட்பட்டோர், தற்கொலை செய்வது அதிகரித்து உள்ளது.

குடும்ப ஆதரவு இல்லாதது, நிதி நெருக்கடி, அன்பானவர்கள் புறக்கணிப்பு, மனநலம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் திருநங்கையரில் 0.01 சதவீதம் பேர் தற்கொலை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில திறந்தநிலை பல்கலைக்கழக உளவியல் துறை தலைவர் டாக்டர் மஞ்சுநாத் கூறுகையில், ''மன அழுத்தத்தில் இருப்போரிடம் குடும்பத்தினரும், நண்பர்களும் நேர்மறையான எண்ணங்களை விதைக்க வேண்டும்.

''இத்தகையோருக்கு மனநல மையங்கள், மனநல நிபுணர்கள் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.

''பள்ளி, கல்லுாரி அளவில் மனநல கல்வியை கட்டாய பாடமாக்க வேண்டும். இதன் மூலம் தற்கொலையை தடுக்கலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us