/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்
/
பெங்களூரு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்
பெங்களூரு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்
பெங்களூரு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்
ADDED : அக் 21, 2025 04:16 AM
பெங்களூரு: பெங்களூரில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி திருவிழா நாளை துவங்குகிறது.
சூரனை, முருகன் வதம் செய்வது கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி நாளை துவங்குகிறது. இதையொட்டி பெங்களூரில் உள்ள முருகர் கோவில்களில் என்னென்ன பூஜைகள் நடக்கிறது என்று பார்க்கலாம்.
ஸ்ரீமகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம்: நாளை முதல் 27 வரை தினமும் காலையில் விக்னேஸ்வர பூஜை, மாலையில் சுப்பிரமணிய மூல மந்திர ஹோமம் நடக்கிறது.
முதல் நாளான நாளை காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்கந்த ஹோமம்; மாலையில் ஆலய வளாகத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி ஊர்வலம்; 23ம் தேதி காலையில் அங்குரா பூஜை; காங்கேய தத்புருஷ் முக சுப்பிரமணிய ஹோமம்; சுப்பிரமணிய ஹோமம்; மாலையில், ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி ஊர்வலம்; 24ம் தேதி காலையில் சோம கும்ப பூஜை; கார்த்திகா அகோர முக ஹோமம், மூலிகை ஹோமம்; மாலையில் யானை வாகனத்தி ல் சுவாமி ஊர்வலம்.
25ம் தேதி காலையில் சோம கும்ப பூஜை; விசாக சுப்பிரமணிய ஹோமம், வாமதேவமுக ஹோமம்; மாலையில் குதிரை வாகனத்தில் சுவாமி ஊர்வலம்; 26ம் தேதி காலையில் அங்குர பூஜை; சத்யோஜத முகம், சுப்பிரமணியர் ஹோமம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு வேல் பூஜை துவங்குகிறது. இதனை தொடர்ந்து காமாட்சி அம்மனிடம் இருந்து, முருகர் வேல் வாங்கும் நிகழ்வு மற்றும் இந்திர வாகனத்தில் சுவாமி ஊர்வலம். விழாவின் கடைசி நாள் காலையில் சோம கும்ப பூஜை; 108 வலம்புரி சங்கு அபிஷேகம்; அங்குர முகம் சிரப் யாகம், சுப்பிரமணிய சத்ரு சம்ஹார திருஷ்டி ஹோமம், பூர்ணாஹுதி நடக்கிறது. மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
அனைத்து நாட்களும் காலை, மாலையில் மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடக்கிறது.
ராஜாஜிநகர் தண்டபாணி ஞானமந்திரா கோவில்: நாளை காலையில் ரக் ஷ பந்தனா, மாலையில் முருகருக்கு பாலசுப்பிரமணியர் அலங்காரம்; 23ம் தேதி இரவில் சுவாமி மலை அலங்காரம்; 24ம் தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு பூஜை; 25ம் தேதி மாலையில் அவ்வையார் உபதேசம் அலங்காரம்; 26ம் தேதி மாலையில் முருகன் வேல் வாங்கும் நிகழ்வு; 27ம் தேதி மாலையில் சூரசம்ஹாரம், இரவில் கலச அபிஷேகம்; 28ம் தேதி காலையில் முருகருக்கு சிறப்பு அபிஷேகம்; இரவில் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்.
பாஷ்யம்நகர் முருகன் கோவில்: நாளை முதல் 25 ம் தேதி வரை காலையில் ஹோம சங்கல்பம்; அதன் பின் மஹா அபிஷேகம், ஸ்கந்த ஹோமம், தீபாராதனை; சிறப்பு அலங்காரம், சத்ரு சம்ஹார அர்ச்சனை; 26ம் தேதி காலையில் அபிஷேகம்; ஏக தின லட்சார்ச்சனை தீபாராதனை. 27ம் தேதி காலையில் விக்னேஸ்வர பூஜை; ஸ்ரீ கந்த சத்ரு சம்ஹார ஹோமம்; பூர்ணாஹுதி, கலசாபிஷேகம்; தீபாராதனை.
மாலையில் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம், தீபாராதனை, பிரசாத வினியோகம். 28ம் தேதி மாலையில் திருக்கல்யாண உற்சவம்; அன்னதானம்; திருமண தடை நீங்க பூ மாலை அணிவிப்பு.
தின்தினி மவுனகுரு சுவாமி மடம்: நாளை முதல் 28ம் தேதி வரை மாலையில் கந்த சஷ்டி கவசம் பாராயணம், அபிஷேகம், மஹா மங்களாரத்தி, 28ல் தண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
ஹலசூரு சுப்பிரமணிய சுவாமி கோவில்:
நாளை காலையில் மூல தெய்வ பிரார்த்தனை, கங்கா பூஜை, சங்கல்பம், புண்யாகம், கலச ஸ்தாபனம், கன ஹோமம், விஷ்ணு ஹோமம், பூர்ணாஹுதி; 23ம் தேதி காலையில் லட்சார்ச்சனை, தட்சிணமூர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி. 24ம் தேதி காலையில் கலசார்ச்சனை, துர்கா ஹோமம், பூர்ணாஹுதி.
25ம் தேதி காலையில் கலசார்ச்சனை, லட்சார்ச்சனை, நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்ஜெய ஹோமம், பூர்ணாஹுதி; 26ம் தேதி காலையில் கலசார்ச்சனை, லட்சார்ச்சனை, சூரியநாராயணா ஹோமம்; 27ம் தேதி காலையில் கலசார்ச்சனை, லட்சார்ச்சனை, ருத்ர ஹோமம், வள்ளி - தெய்வானை ஸ்கந்த ஹோமம், பூர்ணாஹுதி, கும்ப அபிஷேகம். இதை தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம்.
29ம் தேதி மாலையில் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம். அனைத்து நாட்களும் மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்யப்படுகிறது.