ADDED : டிச 11, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களில் தெரு நாய் கடித்ததால் 274 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களில் 274 பேர் நாய் கடித்து காயம் அடைந்து உள்ளனர்.
இதில், பெங்களூரு தெற்கு மாநகராட்சியில் 94; மேற்கு மாநகராட்சி 63; வடக்கு மாநகராட்சி 44; கிழக்கு மாநகராட்சி 41; சென்ட்ரல் மாநகராட்சி 32 என நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு தெற்கு மாநகராட்சியில் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், கடும் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. வரும் 25ம் தேதிக்குள் நாய்களுக்கான பராமரிப்பு மையம் அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

