/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறைக்கு தடை; உத்தரவை வாபஸ் பெற்றது உயர் நீதிமன்றம்
/
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறைக்கு தடை; உத்தரவை வாபஸ் பெற்றது உயர் நீதிமன்றம்
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறைக்கு தடை; உத்தரவை வாபஸ் பெற்றது உயர் நீதிமன்றம்
பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறைக்கு தடை; உத்தரவை வாபஸ் பெற்றது உயர் நீதிமன்றம்
ADDED : டிச 11, 2025 06:04 AM
பெங்களூரு: பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழக்கு விசாரணை, ஜன., 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடக அரசின் தொழிலாளர் நலத்துறை, கடந்த நவ., 20ம் தேதி, 'அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாதவிடாய் காலத்தில், மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.
எதிர்ப்பு இந்த உத்தரவை எதிர்த்து, பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் மானேஜ்மென்ட் ஆப் அவிராடா ஏ.எப்.எல்., கனெக்டிவிட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகியவை, கர்நாடக உயர் நீதிம்னறத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இம்மனு மீதான விசாரணை, நேற்று முன்தினம் நீதிபதி ஜோதி முன் வந்தபோது, அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
அப்போது அரசு அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, அரசின் வாதத்தை கேட்காமல், இடைக்கால உத்தரவு பிறப்பித்தது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது' என்றார்.
தடை வாபஸ் இதையடுத்து, அரசின் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை, திரும்ப பெற்ற நீதிபதி ஜோதி, டிச., 10 ல் அரசு தரப்பு வாதம் கேட்ட பின், உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்றார்.
நேற்று காலை நீதிமன்றம் கூடியதும் நடந்த விவாதம்:
அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி: மாநில அரசின் புதிய கொள்கை, ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும். பரிசீலனைக்கு பின்னரே, அறிமுகப்படுத்தப்பட்டது.
பணியிடத்தில் மனிதாபிமானத்தை உறுதி செய்ய, இத்தகைய கொள்கைக்கு அரசியலமைப்பில் இடம் உள்ளது.
நம் நாட்டு பெண்களின் நலனுக்காக, மிகவும் முற்போக்கான சட்டங்கள், நாடு முழுதும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இத்தகைய கொள்கைகள் உலகம் முழுதும் உள்ளன. கர்நாடகா முற்போக்கான மாநிலம். நாட்டிலேயே இத்தகைய கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலமாகும்.
மனுதாரர்கள் வக்கீல் பிரசாந்த்: இவ்வழக்கு, மாநில அரசுக்கு சட்டத்தை இயற்ற அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது பற்றி அல்ல. சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பதிலாக, நிர்வாக ரீதியாக ஆணையை வெளியிட்டுள்ளதே இப்பிரச்னைக்கு காரணம். சட்டத்தை மீறி செயல்பட கூடாது.
நீதிபதி ஜோதி: மாநில அரசு ஆட்சேபனை தாக்கல் செய்து உள்ளது. இதை பரிசீலித்த பின்னர், மனுதாரர்கள், தங்கள் வாதத்தை தொடரலாம். அதேவேளையில், அரசின் ஆட்சேபனைக்கு, மனுதாரர்கள் ஆட்சேபனை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் இரு தரப்பு வாதங்களும் கேட்கப்படும்.
வக்கீல் பிரசாந்த்: விசாரணை முடியும் வரை, அரசின் உத்தரவை அமல்படுத்த கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
அட்வகேட் ஜெனரல்: அரசு ஏற்கனவே இந்த உத்தரவை அனைத்து இடங்களிலும் அமல்படுத்தி உள்ளது.
நீதிபதி: இவ்வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே வழக்கு தொடர்பான விரிவான வாதங்களை கேட்ட பின்னரே, உத்தரவு பிறப்பிக்க முடியும். வழக்கு விசாரணை 2026 ஜன., 20ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.

