/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரேணுகாசாமி கல்லறை இடிப்பு; தர்ஷன் ரசிகர்கள் கைவரிசை?
/
ரேணுகாசாமி கல்லறை இடிப்பு; தர்ஷன் ரசிகர்கள் கைவரிசை?
ரேணுகாசாமி கல்லறை இடிப்பு; தர்ஷன் ரசிகர்கள் கைவரிசை?
ரேணுகாசாமி கல்லறை இடிப்பு; தர்ஷன் ரசிகர்கள் கைவரிசை?
ADDED : டிச 11, 2025 06:03 AM

சித்ரதுர்கா: சித்ரதுர்கா ரேணுகாசாமியின் கல்லறை உடைக்கப்பட்டதற்கு, தர்ஷன் ரசிகர்களே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, ஆபாச தகவல் அனுப்பினார். இதனால், ஆத்திரம் அடைந்த தர்ஷன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரேணுகாசாமியை அடித்து கொலை செய்தார். இதனால், அவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கம்பி எண்ணுகிறார்.
இந்நிலையில், அவரின், 'டெவில்' திரைப்படம் இன்று வெளியாகிறது. இதை முன்னிட்டு பேனர், பால் அபிஷேகம் செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, சித்ரதுர்காவில் உள்ள ரேணுகாசாமியின் கல்லறை நேற்று உடைக்கப்பட்டது. இதன் பின்னணியில் தர்ஷன் ரசிகர்களே இருப்பர் என கூறப்படுகிறது. தர்ஷன் சிறையில் இருப்பதற்கு காரணமான ரேணுகாசாமியின் கல்லறையை இடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

