/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்.,கில் ரூ.5 கோடி போதை பறிமுதல்; நைஜீரியர்கள் உட்பட 6 பேர் கைது
/
பெங்.,கில் ரூ.5 கோடி போதை பறிமுதல்; நைஜீரியர்கள் உட்பட 6 பேர் கைது
பெங்.,கில் ரூ.5 கோடி போதை பறிமுதல்; நைஜீரியர்கள் உட்பட 6 பேர் கைது
பெங்.,கில் ரூ.5 கோடி போதை பறிமுதல்; நைஜீரியர்கள் உட்பட 6 பேர் கைது
ADDED : டிச 11, 2025 06:02 AM

பெங்களூரு: பெங்களூரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 5.21 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு பாகலுார் மோகன்குமார் லே - அவுட்டில் வசிக்கும் இரு நைஜீரியர்கள், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், ஒரு கிலோ 120 கிராம் எம்.டி.எம்.ஏ., மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.20 கோடி ரூபாய். நைஜீரியாவின் ஒபைசி சிகோஜி, 34, சன்னி சாதிக், 32 கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு கல்வி விசாவில் இந்தியா வந்த இருவரும், உத்தர பிரதேசத்தில் தனியார் கல்லுாரியில் படித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரு வந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஹைட்ரோ கஞ்சா விற்பனை செய்த கேரளாவின் முகமது முஸ்தபா, 36 என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்து, 2 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ, ஹைட்ரோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சஞ்சய்நகர் போலீசார், ஹைட்ரோ கஞ்சா விற்ற, மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கோடியே 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மூன்று வழக்குகளில் மொத்தமாக 5.21 கோடி ரூபாய் மதிப்பிலான 4.50 கிலோ எம்.டி.எம்.ஏ., மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆறு பேர் கைதாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

