/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
4 புலி குட்டிகள் மர்மமான முறையில் பலி
/
4 புலி குட்டிகள் மர்மமான முறையில் பலி
ADDED : டிச 11, 2025 05:57 AM
மைசூரு: மறுவாழ்வு மையத்தில் இருந்த நான்கு புலி குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
மைசூரு மண்டல வன அதிகாரிகள் கூறியதாவது:
மைசூரு ஹுன்சூரு தாலுகா கவுடனகட்டே கிராமத்தில் கடந்த மாதம் நான்கு புலி குட்டிகளை வனத்து றை அதிகாரிகள் மீட்டனர். இந்த குட்டிகள் கூர்ஹள்ளி மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவைகள், சில நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்தன. கடந்த 1ம் தேதி சோர்வாக காணப்பட்ட ஒரு புலி குட்டி உயிரிழந்தது.
மீதமுள்ள மூன்று குட்டிகளும் 5, 7, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொன்றாக உயிரிழந்தன. தொற்று நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், உண்மை காரணம் தெரியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

