/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்லுாரி மாணவர்களுக்கு போதை பரிசோதனை; மங்களூரு போலீஸ் துறை நடவடிக்கை
/
கல்லுாரி மாணவர்களுக்கு போதை பரிசோதனை; மங்களூரு போலீஸ் துறை நடவடிக்கை
கல்லுாரி மாணவர்களுக்கு போதை பரிசோதனை; மங்களூரு போலீஸ் துறை நடவடிக்கை
கல்லுாரி மாணவர்களுக்கு போதை பரிசோதனை; மங்களூரு போலீஸ் துறை நடவடிக்கை
ADDED : டிச 11, 2025 06:02 AM
மங்களூரு: மாணவர்கள் போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க, மங்களூரு போலீஸ் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கல்லுாரிகளில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறது.
இது குறித்து, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி கூறியதாவது:
போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையை, நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். கல்லுாரி மாணவர்கள் இந்த பழக்கத்துக்கு ஆளானதாக, எங்களுக்கு புகார் வந்துள்ளது. எனவே மாணவர்கள் போதை பழக்கம் உள்ளவர்களா என்பது குறித்து, கல்லுாரிக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு சில கல்லுாரி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், நாங்கள் பின்வாங்கவில்லை.
'நெகட்டிவ்' நடப்பாண்டு ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை பல்வேறு கல்லுாரிகளில் பரிசோதனை முடிந்தது. மங்களூரு தெற்கு துணை மண்டலத்தின் உல்லால், கோனாஜி, மங்களூரு ரூரலில் 29 கல்லுாரிகளில், 1,601 மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. எட்டு பேருக்கு பாசிட்டிவ், 1,593 பேருக்கு நெகட்டிவ் என அறிக்கை வந்துள்ளது.
மங்களூரு மத்திய துணை மண்டலத்தின் துறைமுகம், பர்க்கே, பாண்டேஸ்வரா, கத்ரி, உர்வா பகுதிகளின், 30 கல்லுாரிகளில் 1,448 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆறு பேருக்கு பாசிட்டிவ், 1,442 பேருக் கு நெகட்டிவ் என, அறிக்கை வந்துள்ளது. வடக்கு மண்டலத்தின் பனம்பூர், காவூர், பஜ்பே, சுரத்கல், மூல்கி, மூடுபிதரே பகுதியின் 11 கல்லுாரிகளின், 2,020 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அனைவருக்கும் நெகட்டிவ் என, அறிக்கை வந்துள்ளது.
சில கல்லுாரிகளின் நிர்வாகங்கள், மாணவர்களுக்கு போதை பரிசோதனை செய்ய, அனுமதி அளிக்கவில்லை; ஒத்துழைப்பும் தரவில்லை. எனவே கல்லுாரி சுற்றுப்பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி, மாணவர்களிடம் பரிசோதனை நடத்தினர். இதில் சில கல்லுாரிகளின் மாணவர்களுக்கு போதை பழக்கம் இருப்பது தெரிந்தது. இந்த விஷயத்தை கல்லுாரி நிர்வாகங்களிடம் தெரிவித்த பின், அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்த, அனுமதி அளித்துள்ளன.
2வது பரிசோதனை மங்களூரின் சில கல்லுாரி நிர்வாகங்கள், மாணவர்களை சேர்க்கும் போதே, அவர்கள் போதை பொருள் பழக்கம் உள்ளவர்களா, இல்லையா என, பரிசோதிக்கிறது. அறிக்கை வந்த பின்னரே, அவர்கள் கல்லுாரியில் சேர்க்கப்படுகின்றனர். இதே நடைமுறையை, மற்ற கல்லுாரிகளும் பின்பற்ற வேண்டும். வரும் ஜனவரியில், இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

