/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சி.இ.டி.,யில் 2.75 லட்சம் பேர் தேர்ச்சி
/
சி.இ.டி.,யில் 2.75 லட்சம் பேர் தேர்ச்சி
ADDED : மே 25, 2025 02:32 AM
பெங்களூரு: கர்நாடகாவில் சி.இ.டி., எனும் பொது நுழைவுத் தேர்வில் 2.75 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
கர்நாடகாவில் இன்ஜினியரிங் உட்பட்ட பல்வேறு தொழில்முறை படிப்புகளின் அட்மிஷனுக்காக சி.இ.டி., கடந்த மாதம் 16, 17ம் தேதிகளில் நடந்தது. இதில், 3,30,787 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 3,11,991 மாணவர்கள் தேர்வு எழுதினர். கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வு ஆணையம் நடத்திய தேர்வு முடிவுகளை நேற்று உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் வெளியிட்டார். 2,75,677 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
துறை வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் விபரம்:
பொறியியல்
1. பவேஷ் ஜெயந்தி. 2. சாத்விக் பிராதர். 3. தினேஷ் கோமதி ஷங்கர் அருணாச்சலம்.
மருத்துவம்
1. ஹரிஷ்ராஜ். 2. ஆத்ரேயா வெங்கடாசலம். 3. சப்ஹல் ஷெட்டி.
விவசாயம்
1. அக் ஷய் ஹெக்டே. 2. சாய்ஷ் ஷ்ரவன் பண்டிட், 3. சுசித் பிரசாத்.