/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து 29 'நரேகா' ஊழியர்கள் காயம்
/
டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து 29 'நரேகா' ஊழியர்கள் காயம்
டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து 29 'நரேகா' ஊழியர்கள் காயம்
டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து 29 'நரேகா' ஊழியர்கள் காயம்
ADDED : மே 14, 2025 11:12 PM

கொப்பால்: டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 29 'நரேகா' ஊழியர்கள் காயம் அடைந்தனர்.
கொப்பால் மாவட்டம், கங்காவதியின் முஸ்துார் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 29 'நரேகா' ஊழியர்கள், நேற்று காலை கரடகியில் உள்ள ஜிரால் கல்குடிக்கு டாடா ஏஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
கரடகியின் பரகூரு கிராஸ் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த பார்வதம்மா, திம்மம்மா, கோவிந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் 26 பேர் லேசான காயமடைந்தனர். தகவல் அறிந்த கரடகி போலீசார் காயமடைந்தவர்களை கொப்பால், ஹூப்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், டாடா ஏஸ் வாகனத்தை அதன் ஓட்டுநர் வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.