/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உறைவிட பள்ளியில் தீ 2ம் வகுப்பு மாணவன் பலி
/
உறைவிட பள்ளியில் தீ 2ம் வகுப்பு மாணவன் பலி
ADDED : அக் 09, 2025 11:02 PM
குடகு: உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இரண்டு மாணவர்களின் புத்திசாலித்தனத்தால் மற்ற மாணவர்கள் உயிர் பிழைத்தனர்.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின், காடிகேரி கிராமத்தில் உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு 51க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். உறைவிடப் பள்ளியில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. திடீரென விழித்துக் கொண்ட மாணவர்கள் பபின் மற்றும் யஸ்வின் தீப்பற்றி எரிவதை கண்டனர்.
சிறிதும் தாமதிக்காமல், சத்தம் போட்டு மற்ற மாணவர்களை எழுப்பினர். அனைவரும் கதவை நோக்கி ஓடினர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. அங்கிருந்த பிளாஸ்கால், ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயற்சித்தும் பலனில்லை.
எனவே பக்கத்து அறைக்கு சென்று, அங்கிருந்த ஜன்னல் கதவை திறந்து, மாணவர்களை வெளியே அனுப்பினர். ஆனால் இரண்டாம் வகுப்பு மாணவன் புஷ்பக், 8, வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
புஷ்பக், பாகமண்டலா அருகில் உள்ள, செட்டிமானி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை அனில் குமார், விவசாயி. இவரது தாய் திரிவேணி தொடக்கப்பள்ளியில் கவுரவ ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இரண்டு மாணவர்களின் புத்திசாலித்தனத்தால், 51 மாணவர்கள் உயிர் பிழைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்படுத்தினர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, மடிகேரி ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.