தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/2வது சாட்டிலைட் பஸ் நிலையம் பெங்களூரில் அமைக்க திட்டம்

2வது சாட்டிலைட் பஸ் நிலையம் பெங்களூரில் அமைக்க திட்டம்

2வது சாட்டிலைட் பஸ் நிலையம் பெங்களூரில் அமைக்க திட்டம்


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பயணியரின் வசதிக்காக, பெங்களூரில் மற்றொரு சாட்டிலைட் பஸ் நிலையம் கட்ட, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரின் மைசூரு சாலையில், ஏற்கனவே சாட்டிலைட் பஸ் நிலையம் உள்ளது. இதுபோன்று மற்றொரு சாட்டிலைட் பஸ் நிலையம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.புரத்தில் சாட்டிலைட் பஸ் நிலையம் கட்டப்படும். இது குறித்து, திட்ட அறிக்கை தயாரிக்கும்படி, பெங்களூரு கிழக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரில் இருந்து, ஹொஸ்கோட், கோலார், சிக்கபல்லாபூர், ஆந்திராவுக்கு செல்லும் பஸ்கள், கே.ஆர்.புரம் வழியாக செல்கின்றன. கே.ஆர்.புரம் பகுதி பயணியருக்கு வசதியாக, இங்கு சாட்டிலைட் பஸ் நிலையம் கட்ட, கே.ஆர்.புரம் மற்றும் பட்டரஹள்ளி நடுவில், பிரதான சாலை அருகில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு சாட்டிலைட் பஸ் நிலையம் கட்டுவதற்கு, முன்னேற்பாடுகளை செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி நிலத்தை கையகப்படுத்துவது, நில உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது அல்லது மாற்று நிலம் வழங்குவது உட்பட மற்ற பணிகள் துவங்கப்பட்டுள்ளன. புதிய சாட்டிலைட் பஸ் நிலையத்தில், பயணியருக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us