தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பக்தர்கள் பயத்தை தீர்க்கும் தீபம்புதி காளிகாம்பா கோவில்

பக்தர்கள் பயத்தை தீர்க்கும் தீபம்புதி காளிகாம்பா கோவில்

பக்தர்கள் பயத்தை தீர்க்கும் தீபம்புதி காளிகாம்பா கோவில்


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா கே.ஜி.தேவப்பட்டணா கிராமத்தில், தீபம்புதி என்ற ஏரியின் கரையில் காளிகாம்பா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மை தெய்வம் காளிகாம்பா. காளி தேவியின் வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விவசாய நிலம், கால்நடைகளை காக்கும் காவல் தெய்வமாக காளிகாம்பாவை கிராம மக்கள் வழிபடுகின்றனர். பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர், இந்த கோவிலுக்கு வந்து காளிகாம்பாவை தரிசிக்கின்றனர்.

ஒரு முறை தரிசித்தால், தங்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் அடியோடு தீர்ந்து போகும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமண வரம், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயத்தில் நல்ல விளைச்சல் காணவும், மனதில் ஏற்படும் இனம்புரியாத பயத்தை போக்கவும், ஏராளமான கிராம மக்கள் இங்கு வருகின்றனர். பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் அம்மனுக்கு பச்சை பட்டு புடவை, வளையல், காப்பு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

வாழ்வாதாரம்



கோவில் அமைந்துள்ள பகுதியில் பல நுாற்றாண்டுக்கு முன் கடும் வறட்சி நிலவியுள்ளது. அப்போது காளிகாம்பா தேவி சுயம்புவாக தோன்றி மக்களை பாதுகாத்ததுடன், நல்ல மழை பெய்ய வைத்து ஏரியில் நீர் பெருகி, மக்கள் வாழ்வாதாரத்தை செழிக்க வைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

ஏரிக்கரையில் அமைந்து இருப்பதால் குளிர்ந்த காற்றும், பசுமையான மரங்களும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன நிம்மதி, ஆன்மிக அமைதியை தருகின்றன.

மாலை நேரத்தில் ஏரியின் பின்னணியில் சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கலாம். தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைளில் காலையில் இருந்தே அம்மனுக்கு அபிஷேகங்கள், மஹா மங்களாரத்தி நடைபெறும்.

சாரதா, சைத்ர நவராத்திரி உத்சவம், தீப உத்சவம் இங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள். இதுதவிர ஆண்டிற்கு ஒரு முறை கோவில் திருவிழா நடக்கிறது. கிராம வீதிகளில் அம்மன் உலா வரும் போது, தங்கள் வீடுகள் முன்பு மாவிளக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் அம்மனை வழிபடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us