ADDED : ஜூன் 20, 2026 03:32 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: ஏ.ஐ., மூலம் நடிகை ருக்மணி வசந்த்தின் ஆபாச வீடியோவை வெளியிட்ட மூவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கன்னட நடிகை ருக்மணி வசந்த் 'பிகினி' உடையில் இருப்பது போல, ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த மாதம் வெளியாகின. இது குறித்து, அவர் பெங்களூரு சைபர் போலீசில் புகார் அளித்தார்.
இவ்வழக்கில் மூன்று பேரை கைது செய்து உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர். பாகல்கோட்டை சேர்ந்த ரவிகுமார், 24, ஷிவமொக்காவின் சந்திரகாந்த், 33, பெங்களூரை சேர்ந்த ரஞ்சித், 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மொபைல் போனில், அதிநவீன ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை உருவாக்கி உள்ளனர். இவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
