தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய 3 பேர் கைது

 பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய 3 பேர் கைது

 பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய 3 பேர் கைது


ADDED : ஜன 12, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தார்வாட்: ஹூப்பள்ளியில் 35 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவாக எடுத்து பரப்பிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹூப்பள்ளி நகரில் நேற்று முன்தினம் ஒரு வீடியோ வைரலானது. அதில், 35 வயது பெண்ணை கட்டாயப்படுத்தி, அவருக்கு மதுபானம் ஊற்றி கொடுத்த இருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி பதிவாகியிருந்தது.

மொட்டை வீடியோவில் இருக்கும் இருவரும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக்கும் சிவசங்கர் காலனியை சேர்ந்த சிவானந்தா, 29, கணேஷ் கிட்டன்னவர், 31, என்பது தெரிந்தது. இதையறிந்த இச்சமுதாயத்தினர், 'எங்கள் சமுதாயத்தை தலைகுனிய வைத்து விட்டனர்' என்று கோபம் அடைந்தனர்.

இருவரையும் பிடித்த அவர்கள், மரத்தில் கட்டி வைத்தனர். அவர்களுக்கு மொட்டை அடித்து, மீசை, தாடி, புருவங்களை எடுத்து, அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஓல்டு ஹூப்பள்ளி போலீசார், இருவரையும் மீட்டனர்.

சமுதாயத்திவர் கூறுகையில், 'எங்கள் சமுதாயத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு மொட்டை அடித்தோம். ஆனால் சமுதாயத்தின் பெரியவர்கள் எங்களை தடுத்து, போலீசில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்' என்றனர்.

தகவல் அறிந்த நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், சம்பவ இடத்துக்கு வந்தார்.

பின், அவர் கூறியதாவது:

கடந்த 9ம் தேதி, மதியம் 12:00 மணியளவில், 35 வயது பெண்ணை, அம்பேத்கர் மைதானத்தில் இருந்து ஆட்டோவில் அழைத்து சென்றனர். பின், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து, ஒன்றாக இருந்துள்ளனர். இதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின், மீண்டும் அம்பேத்கர் மைதானம் அருகில் விட்டு, விட்டு சென்றுவிட்டனர்.

ஒன்றரை மாதம் வீடியோவில் இருந்த பெண்ணின் முகத்தை வைத்து, அவரை கண்டுபிடித்துள்ளோம். அவர், கடந்த ஒன்றரை மாதமாக, ஹூப்பள்ளியில் சுற்றி வருகிறார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்புகார் தொடர்பாக சிவானந்த், கணேஷ், பிரதீப் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீடியோவை சமூக வலைதளத்தில் பரவவிட்டவர், பிரதீப் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாதிப்புக்கு உள்ளான பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒன்றரை மாதத்துக்கு முன், வேறு மாவட்டத்தில் இருந்து ஹூப்பள்ளி வந்து உள்ளார். அவரது கணவர், குற்ற வழக்கு தொடர்பாக, ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், தன்னை தாக்கி, தலையை மொட்டை அடித்ததாக, கைது செய்யப்பட்ட சிவானந்த் அளித்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் காலனியை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையறிந்த அச்சமுதாயத்தினர் சிலர், போலீஸ் நிலையம் முன் கூடி போராட்டம் நடத்தினர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us