தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பல்லாரி கலவர வழக்கில் சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

 பல்லாரி கலவர வழக்கில் சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

 பல்லாரி கலவர வழக்கில் சி.ஐ.டி., விசாரணை துவக்கம்


ADDED : ஜன 12, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லாரி: பல்லாரி கலவர வழக்கில் சி.ஐ.டி., விசாரணை நேற்று முதல் துவங்கியது. புருஸ்பேட் போலீஸ் நிலையம், எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்ற விசாரணை குழு, தகவல் பெற்று கொண்டது.

பல்லாரியில் வால்மீகி சிலை நிறுவும் நிகழ்ச்சிக்காக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன்பு கட்டப்பட்ட பேனரை அகற்றியதால், கடந்த 1ம் தேதி இரவு பல்லாரியில் கலவரம் ஏற்பட்டது. தனியார் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், குண்டு பாய்ந்து காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் ரெட்டி, 28, என்பவர் இறந்தார்.

கலவரம், உயிரிழப்பு, ஜாதியை சொல்லி திட்டியது என நான்கு தனித்தனி வழக்குகள் பதிவாகின. ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவானது.

கலவரம் தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, நேற்று முன்தினம், கர்நாடக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக சி.ஐ.டி., எஸ்.பி., ஹர்ஷா பிரியம்வதா நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையில் நேற்று காலையில் பல்லாரி சென்ற போலீஸ் குழுவினர், முதலில் புருஸ்பேட் போலீஸ் நிலையத்திற்கு சென்று, இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கைகளை பெற்றனர்.

பின், எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று, எஸ்.பி., சுமன் பன்னேகருடன் ஆலோசனை நடத்தி தகவல் பெற்று கொண்டனர்.

கலவரம் நடந்த இடத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கிடையில் பல்லாரி கலவரத்தை கண்டித்து, வரும் 17ல் போராட்டமோ அல்லது பாதயாத்திரையோ நடத்த பா.ஜ., முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து மங்களூரில் முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:

பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும், வேண்டாம் என்று பா.ஜ.,வினருக்கு கூற நாங்கள் யார். 2008ல் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, ரெட்டி சகோதரர்கள் பல்லாரியை தனி குடியரசாக மாற்ற உள்ளனர் என்று, லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார்.

இதுகுறித்து சட்டசபையில் நான் கேள்வி எழுப்பிய போது, ரெட்டி சகோதரர்களும், எடியூரப்பாவும், தைரியம் இருந்தால் பல்லாரி வரை பாதயாத்திரை நடத்தும்படி எனக்கு சவால் விடுத்தனர். இதனால் அப்போது பாதயாத்திரை நடத்தினோம்.

இப்போது அவர்கள் எதற்கு பாதயாத்திரை நடத்த உள்ளனர். பேனரை அகற்றி பிரச்னையை ஏற்படுத்தியது அவர்கள் தான். ரெட்டி சகோதரர்கள், ஸ்ரீராமுலு தங்கள் அதிகாரத்தை இழந்து விட்டனர். நாங்களும் அரசியல் உள்ளோம் என்று காட்ட ஏதாவது செ ய்கின்றனர்.

இவ்வாறு கூறினார்.

ஊடகத்தினர் மீது பாய்ச்சல்

முதல்வர் கூறுகையில், ''வெறுப்பு பேச்சு தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று கவர்னரிடம் வலியுறுத்த, பா.ஜ., முடிவு செய்து உள்ளது. அந்த மசோதா சட்டசபை, மேல்சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது மசோதா, அவர் முன் உள்ளது. மசோதாவை கவர்னர் ஏற்று கொள்ளவோ, திருப்பி அனுப்பவோ இல்லை. ' 'அவர் என்னை அழைத்தால் அவருக்கு விளக்கம் அளிப்பேன். சங்கராந்திக்கு பிறகு முதல்வர் நாற்காலிக்கு சண்டை நடக்கும் என்று யார் சொன்னது. எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. நீங்கள் (ஊடகம்) தான் உருவாக்கி விடுகிறீர்கள்,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us