மாணவரை கத்தியால் குத்தி பைக்கை பறித்த 3 பேர் கைது
மாணவரை கத்தியால் குத்தி பைக்கை பறித்த 3 பேர் கைது
ADDED : மே 18, 2026 11:21 PM
ராமமூர்த்திநகர்: கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தி, பைக்கை பறித்து சென்ற சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு ராமமூர்த்திநகரில் வசிப்பவர் தீரஜ், 19; கல்லுாரி மாணவர். இவர், நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு பிரியாணி சாப்பிட ஹொஸ்கோட்டிற்கு தனது பைக்கில் தனியாக சென்றார். ராமமூர்த்திநகர் பஞ்சாரா லே - அவுட்டில் சென்ற போது, பைக்கை, மூன்று பேர் மறித்தனர். தீரஜை தாக்கி பைக்கை பறிக்க முயன்றனர்.
இதற்கு தீரஜ் எதிர்ப்பு தெரிவித்ததால் கத்தியால் அவரது முதுகு, தொடையில் குத்தி விட்டு, பைக்கை பறித்து விட்டு தப்பினர். அந்த வழியாக வந்தவர்கள் தீரஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீரஜ் பெற்றோர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த, பானஸ்வாடி போலீசார் விசாரணையை துவக்கினர்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், மொபைல் போன் டவர் அடிப்படையில் பானஸ்வாடியின் புவன், 23, மிதுன், 24 மற்றும் 16 வயது சிறுவன் என 3 பேரை, நேற்று கைது செய்தனர். தீரஜ், பைக்கும் மீட்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மற்ற இருவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
