/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது ரூ.56.51 லட்சம் நகை, பைக் மீட்பு
/
திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது ரூ.56.51 லட்சம் நகை, பைக் மீட்பு
திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது ரூ.56.51 லட்சம் நகை, பைக் மீட்பு
திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது ரூ.56.51 லட்சம் நகை, பைக் மீட்பு
ADDED : மே 07, 2025 08:50 AM

பெங்களூரு: பெங்களூரில் இரண்டு திருட்டு வழக்குகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 56.51 லட்சம் ரூபாய் மிதிப்பிலான நகைகள், இரண்டு பைக்குகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு, ஒசகெரேஹள்ளியில் வசிப்பவர் டாக்டர் சாந்தி. இவர் சமீபத்தில் மும்பைக்குச் சென்றிருந்தார். அந்த வேளையில் அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள், 325 கிராம் நகைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கிரிநகர் போலீசார் விசாரித்தனர். வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரிக்கப்பட்டது. அவர்கள் திருட்டில் ஈடுபடவில்லை என்பது தெரிந்தது.
இதையடுத்து சாந்தியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற, அவரது சகோதரி மகன் பிரதம், 27, மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது அடிக்கடி அவருக்கு பணம் வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, சாந்தி வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டார்.
சாந்திக்கு குழந்தை இல்லாததால் பிரதமை தத்தெடுத்து வளர்த்துள்ளார். எம்.பி.ஏ., படிக்க வைத்து சென்னையில் ஒரு நிறுவனத்திலும் வேலையும் வாங்கிக் கொடுத்தார். அந்த வேலையை உதறிய பிரதம், ஆடம்பர செலவு செய்ய சாந்தி வீட்டில் திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 24.51 லட்சம் ரூபாய் மதிப்பிலான 258 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஜெயநகர் போலீசார், திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 390 கிராம் தங்க நகைகள், இரண்டு பைக்குகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு 32 லட்சம் ரூபாய்.
ஹெச்.ஆர்.ஆர்., லே அவுட், கோவிந்த்ராஜ் நகர், சி.சி.பி., போதை தடுப்பு பிரிவு போலீசார் பல இடங்களில் நடத்திய வாகன சோதனையில் 109 கிலோ கஞ்சா, ஒரு சரக்கு ஆட்டோ, ஒரு பைக், 33 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 89.20 லட்சம் ரூபாய். இந்த வழக்குகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.