ADDED : ஜூலை 23, 2025 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூப்பள்ளி : ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.
பெலகாவி, சதவத்தி தாலுகா முனவல்லி நகரத்தை சேர்ந்த பஞ்சாக் ஷரி, 33, - வர்ஷனி, 28, தம்பதி. இவர்களுக்கு ஆறு வயதில் மகள் உள்ளார். வர்ஷனி, இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. ஹூப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆப்பரேஷனில், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூன்று குழந்தைகளும், தாய் வர்ஷனியும் நலமாக உள்ளார். இதனால், வர்ஷனி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.