/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கால்வாயை ஆக்கிரமித்த 3 வீடுகள் இடித்து அகற்றம்
/
கால்வாயை ஆக்கிரமித்த 3 வீடுகள் இடித்து அகற்றம்
ADDED : ஜன 24, 2026 05:22 AM

சர்ஜாபூர்: சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, மூன்று வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
பெங்களூரு ஹெப்பகோடி அருகே வீரசந்திரா கிராமத்தில், சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக, ஹெப்பகோடி நகராட்சி கமிஷனர் ராஜேந்திராவுக்கு, சில மாதங்களுக்கு முன் தகவல் கிடைத்தது. அவர் நேரில் சென்று ஆய்வு செய்த போது, தனக்கு கிடைத்த தகவல் உண்மை என்பதை அறிந்தார்.
சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, மூன்று வீடுகளையும் இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்தார். வீட்டில் வசித்தோருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில், நேற்று காலை வீரசந்திரா கிராமத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், போலீஸ் உதவியுடன், கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய மூன்று வீடுகளை, பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.

