தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மலை மஹாதேஸ்வரா மலைக்கு இரவில் பாதயாத்திரை செல்ல தடை

 மலை மஹாதேஸ்வரா மலைக்கு இரவில் பாதயாத்திரை செல்ல தடை

 மலை மஹாதேஸ்வரா மலைக்கு இரவில் பாதயாத்திரை செல்ல தடை


ADDED : ஜன 24, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: சிறுத்தை தாக்கி இளைஞர் பலியானதால், தாளுபெட்டாவில் இருந்து மலை மஹாதேஸ்வரா மலைக்கு மாலை, 6:00 முதல் காலை 6:00 மணி வரை பாதயாத்திலை செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து, சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

மாண்டியாவை சேர்ந்த பிரவீண்குமார் என்ற இளைஞர், தன் நண்பர்களுடன் ஜனவரி, 21ல், மலை மஹாதேஸ்வரா மலைக்கு, பாதயாத்திரை சென்றார். மலை அடிவாரத்தில் உள்ள தாளபெட்டாவில் இருந்து படிகளில் ஏறி செல்லும் போது, சிறுத்தை அவர் மீது பாய்ந்து, வனப்பகுதிக்குள் இழுத்து சென்று கொன்றது.

சம்பவம் நடந்த பின், சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டன. நேற்று முன் தினம் இரவு சிறுத்தை பிடிபட்டது. சிறுத்தை பிடிபட்டாலும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, தாளுபெட்டாவில் இருந்து மலை மஹாதேஸ்வரா மலைக்கு மாலை, 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பாதயாத்திலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us