தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக ஐகோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம்

 கர்நாடக ஐகோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம்

 கர்நாடக ஐகோர்ட்டுக்கு 3 நீதிபதிகள் நியமனம்


ADDED : மே 30, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அரசியலமைப்பின் 224வது பிரிவின் உட்பிரிவு (1)ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மாவட்ட நீதிபதிகளாக உள்ள ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே, கேடம்பாடி கணேஷ், பிரிங்கேஷ் மகாதேவப்பா ஆகியோர், மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில், ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே, அவர் பதவியேற்கும் நாளில் இருந்து, 2028 மார்ச் 17ல் ஓய்வு பெறும் வரை இரண்டு ஆண்டுகள்; கேடம்பாடி கணேஷ், பிரியங்கேஷ் மகாதேவப்பா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பெங்களூரில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றம் தார்வாட், க லபுரகி உயர் நீதிமன்ற கிளைகளில், மொத்தம், 62 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தலைமை நீதிபதி உட்பட 45 நீதிபதிகள் உள்ளனர். தற்போது மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 14 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us