ஜெயின் கோவிலில் 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
ஜெயின் கோவிலில் 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
ADDED : மே 13, 2026 11:35 PM
ஹூப்பள்ளி: ஜெயின் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 3 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.
ஹூப்பள்ளியின், ஹோசூரு கிராமத்தில், பிரபலமான ஜெயின் கோவில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு பூஜை முடிந்த பின், கோவில் பூட்டப்பட்டது.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, மூன்று மர்ம நபர்கள் ஜெயின் கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்தனர். முதலில் பாதுகாப்பு சைரனின் இணைப்பை துண்டித்தனர். கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களை துண்டித்தனர்.
அதன் பின், கர்ப்பகிரஹத்தில் கடவுளை அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பிரபாவளி, மகுடம் உட்பட, 3 கிலோ பொருட்கள், தங்க நகைகளை பையில் நிரப்பி கொண்டு தப்பினர். நேற்று காலை அர்ச்சகரும், பக்தர்களும் கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பது தெரிந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த வித்யாநகர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் வல்லுநர்களும் வந்துள்ளனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள கோவிலில், திருட்டு நடந்திருப்பதால், அப்பகுதியினர் கிலி அடைந்துள்ளனர்.
