தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பீஹார் வாலிபரை கார் ஏற்றி கொன்ற அசாமை சேர்ந்த 3 நபர்கள் கைது

பீஹார் வாலிபரை கார் ஏற்றி கொன்ற அசாமை சேர்ந்த 3 நபர்கள் கைது

பீஹார் வாலிபரை கார் ஏற்றி கொன்ற அசாமை சேர்ந்த 3 நபர்கள் கைது


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கே.ஆர்.புரம்: மெதுவாக செல்லும்படி கூறியதால், பீஹார் வாலிபரை கார் ஏற்றி கொன்ற, அசாம் வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் சாகு, 25, பெங்களூரு பி.டி.எம்., லே – அவுட்டில் உள்ள தங்கும் விடுதியில் சமையல்காரராக வேலை செய்தார்.

எலக்ட்ரானிக் சிட்டி பிரகதி நகரில் நண்பர்களுடன், வாடகைக்கு வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த 21ம் தேதி இரவு ரஞ்சித்குமாரும், அவரது நண்பர் நிதிஷும் வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றனர். அந்த வழியாக ஒரு கார் வேகமாக சென்றது. மெதுவாக செல்லும்படி காரை ஓட்டுநரை பார்த்து, ரஞ்சித்குமார் சைகை காட்டினார்.

காரில் இருந்த நான்கு பேருக்கும், ரஞ்சித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. காரை ஓட்டி வந்தவர் ரஞ்சித்குமார் மீது மோதினார். காரின் அடியில் சிக்கிய அவர், 100 மீட்டர் துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு, படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் இறந்தார். நிதிஷ் அளித்த புகாரில், எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் விசாரித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், காரில் பயணம் செய்தவர்களில் மூன்று பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தின் அஜய் ரபிதாஸ், 25, சஜல் நாம் சுந்தர், 25, பிஜய் ராய், 24, என்பதும், ஷ்யாம் கோஹரை என்பவர் தலைமறைவாக இருப்பதும் தெரிந்தது.

குடிபோதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என தெரியாமல், காரை ஏற்றி ரஞ்சித்குமாரை கொலை செய்ததை, மூன்று பேரும் ஒப்பு கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us