/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.5.40 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் 3 பேர் கைது
/
ரூ.5.40 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் 3 பேர் கைது
ரூ.5.40 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் 3 பேர் கைது
ரூ.5.40 கோடி போதை பறிமுதல் நைஜீரியாவின் 3 பேர் கைது
ADDED : ஆக 20, 2025 07:57 AM

பெங்களூரு : பெங்களூரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட நைஜீரியா நாட்டின் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 5.40 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ., போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பெட்டதாசனபுரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள ஏ.டி.எம்., மையம் முன் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்தனர். அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, எம்.டி.எம்.ஏ., போதை பொருள் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய காத்து நின்றது தெரிந்தது; அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவை சேர்ந்த ஜோயல் கபோங், 34 என்பது தெரிந்தது. இவர், பெங்களூரில் வசிக்கும் தனது நாட்டை சேர்ந்த ஜாய் சாண்டே, 30 என்ற பெண்ணிடம் இருந்து, எம்.டி.எம்.ஏ., போதை பொருள் வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து, 2 கிலோ 150 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். கைதான இருவரும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்ததும், விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் தெரிந்தது.
இதுபோல ஆவலஹள்ளி பகுதியில் தங்கி இருந்து, போதை விற்பனையில் ஈடுபட்ட, நைஜீரியாவின் ஜான் கோஸ்டா, 37 என்பவரை, சி.சி.பி., போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இவரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை பறிமுதல் செய்யப்பட்டது.