ADDED : மே 20, 2026 10:47 PM
சிக்கமகளூரு: மான் வேட்டையாடிய மூவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
சிக்கமகளூரு அட்கன்டி கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, மான் வேட்டையில் ஈடுபட்ட, அதே கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன், 31, சுரேஷ், 38, கன்னியப்பன், 27, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரிக்கப்படுகிறது. இவர்கள் மான் இறைச்சியை விற்பனை செய்து, பணம் சம்பாதித்து வந்தனர். இவர்களின் கூட்டாளிகள் குறித்து விசாரிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் சில பகுதிகளில் மான் வேட்டை நடப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இதன்பேரில், தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
