/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் விழாவில் 'கட் அவுட்' விழுந்து 3 பேர் படுகாயம்
/
முதல்வர் விழாவில் 'கட் அவுட்' விழுந்து 3 பேர் படுகாயம்
முதல்வர் விழாவில் 'கட் அவுட்' விழுந்து 3 பேர் படுகாயம்
முதல்வர் விழாவில் 'கட் அவுட்' விழுந்து 3 பேர் படுகாயம்
ADDED : ஜன 25, 2026 05:12 AM

தார்வாட்: ஹூப்பள்ளியில் வீடுகள் வழங்கும் விழாவுக்காக, அமைக்கப்பட்டிருந்த மெகா சைஸ் கட் - அவுட் விழுந்து பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.
தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியில் வீட்டு வசதி துறை 42,345 பேருக்கு வீடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இவ்விழாவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் அடங்கிய மெகா சைஸ் கட் - அவு ட்கள், விழா நடக்கும் மைதானம் அருகில் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று காலையில் 30க்கு 35 அடி உயரம் கொண்ட, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட் - அவுட் சரிந்து விழுந்தது. அதன் பின், முதல்வர் சித்தராமையா, அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆகியோரின் கட் - அவுட்களும் விழுந்தன.
இதில், பைஹட்டி கிராமத்தின் சங்கர் ஹடபடா, 32, கங்காதர் நகர் சாந்தா, 60, தார்வாடின் மஞ்சுநாத் குல்கர்னி, 33, ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த கட்சியினரும், போலீசாரும், அவர்களை மீட்டு கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின், பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்ட பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரையும் முதல்வர் சித்தராமையா சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

