தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து அரசியல் உள்நோக்கமா: 8 பேர் கைது

 ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து அரசியல் உள்நோக்கமா: 8 பேர் கைது

 ஜனார்த்தன ரெட்டி வீட்டில் தீ விபத்து அரசியல் உள்நோக்கமா: 8 பேர் கைது


ADDED : ஜன 25, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லாரி: பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான 'ஜி ஸ்கொயர் லே - அவுட்டில்' கட்டப்பட்டுள்ள மாதிரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பல்லாரியில் கங்காவதி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமாக 'ஜி ஸ்கொயர் லே - அவுட்' உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் பார்வைக்காக 'மாதிரி வீடு' கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தில் யாரும் வசிக்கவில்லை. ஆனால், வீட்டுக்கு தேவையான பொருட்கள் உள்ளன. இதை பாதுகாக்க செக்யூரிட்டியும் இல்லை.

நேற்று முன்தினம் மாலையில், இவ்வீட்டின் மாடியில் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்லாரி ரூரல் போலீசாரும் வழக்கு பதிவு விசாரித்தனர்.

பல்லாரி எஸ்.பி., சுமன் பனேகர் நேற்று கூறியதாவது:

தீ விபத்து நடந்த வீட்டை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த வீடு, ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமானது; இங்கு யாரும் வசிக்கவில்லை. தீ விபத்து தொடர்பாக ஆறு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்களின் வயது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.

வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டு மதில் சுவர் ஏறி குதித்து, வீட்டிற்குள் சென்று 'ரீல்ஸ்' செய்துள்ளனர். சிகரெட்டால் விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களில் இருவர் மும்பையை சேர்ந்தவர்கள். யாருக்கும் அரசியல் பின்னணி இல்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ''வீட்டில் இருந்து சிறுவர்கள் ஓடும் வீடியோ உள்ளது. வீட்டில் தீ வைப்பதால், அவர்களுக்கு என்ன லாபம். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது தொடர்பாக வரும் 27 ம் தேதி சட்டசபையில் கேள்வி எழுப்புவேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us