ADDED : மார் 01, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
ராய்ச்சூர்: வேகமாக வந்த டிராக்டர் மோதியதில், பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ராய்ச்சூர் நகரின் பசவேஸ்வரா சதுக்கம் அருகே, நேற்று அதிகாலை பைக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த டிராக்டர் மோதியது. பைக்கில் இருந்த முகமது அலி பாஷா, 24, நூர் அகமது, 19, பயாஜ், 26, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்த மூவரும், ராய்ச்சூர் நகரின் காந்தி சவுக்கின் சுகானே என்ற இடத்தில் வசித்தவர்கள். பணி நிமித்த மாக மூவரும் ஒரே பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்துக்கு டிராக்டர் ஓட்டுநரின் அலட்சியமே காரணமாகும். ராய்ச்சூர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர். டிராக்டர் ஓட்டு நரை கைது செய்துள்ளனர்.
