தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லாரி மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி

 லாரி மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி

 லாரி மீது கார் மோதி 3 பேர் பரிதாப பலி


ADDED : ஆக 08, 2026 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின், கொட்டகேஹாரா கிராமத்தின் அருகே, நேற்று அதிகாலை 1:30 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில், காஸ் சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரி மீது மோதியது.

மோதிய வேகத்தில், கார் நொறுங்கியது. இதில் பயணித்த குருகிரண், 28, மோகன், 30, ஞானேஷ், 28, ஆகியோர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

பிரேம் குமார், ஹிருதிக் ஆகிய இருவர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த பனகல் போலீசார், அப்பகுதியினர் உதவியுடன், மூவரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த இருவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் துமகூரை சேர்ந்தவர்கள் என்பதும், தர்மஸ்தலாவுக்கு சென்றபோது விபத்து நடந்ததும் தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us