தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்  ஏ.எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் 'சஸ்பெண்ட்'

 வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்  ஏ.எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் 'சஸ்பெண்ட்'

 வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்  ஏ.எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 31, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சட்டை மீது பொருத்தி இருக்கும் பாடி கேமராவை அணைத்து விட்டு, வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய ஏ.எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பெங்களூரு ஐகிரவுண்ட் போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்யா சதுக்கம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், வாகனங்களை வேண்டுமென்றே நிறுத்தி சோதனை என்ற பெயரில், வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக, மேற்கு மண்டல போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் அனுப் ஷெட்டிக்கு அடிக்கடி புகார்கள் சென்றன.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐகிரவுண்ட் போக்குவரத்து போலீஸ் நிலைய ஏ.எஸ்.ஐ., சுரேஷ், கான்ஸ்டபிள்கள் பிரசாந்த், சாதிக் ஆகியோர், வாகனங்களை தேவையின்றி நிறுத்தி, வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் வாங்கியது தெரிந்தது.

லஞ்சம் வாங்கும் போது, தாங்கள் சட்டை மீது பொருத்தி இருக்கும் பாடி கேமராவை அணைத்ததும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து, டி.சி.பி., அனுப் ஷெட்டி நேற்று உத்தரவிட்டார்.

கான்ஸ்டபிள் சாதிக், இதற்கு முன் விஜயநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், ஐகிரவுண்ட் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு வந்த பின்னரும் தன் வேலையை காண்பித்து சிக்கி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us