/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாவணகெரே பேனர் 3 போலீசார் சஸ்பெண்ட்
/
தாவணகெரே பேனர் 3 போலீசார் சஸ்பெண்ட்
ADDED : ஆக 31, 2025 11:21 PM
தாவணகெரே: விநாயகர் சதுர்த்திக்காக ஆட்சேபனைக்குரிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்ட சம்பவத்தில், போலீஸ் எஸ்.ஐ., தலைமை ஏட்டு, பெண் ஏட்டு ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
தாவணகெரே மாவட்டம் மட்டிகல்லில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஆட்சேபனைக்குரிய வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற போலீசார் முயற்சித்தபோது, ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, வேறு பேனர் வைத்தனர்.
இச்சம்பவத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஹிந்து ஜாக்ரன வேதிகே தென் மாவட்ட தலைவர் சதீஷ் பூஜாரி கைது செய்யப்பட்டார்.
மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கடமை தவறியதாக, ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலைய எஸ்.ஐ., சச்சி பிராதர், தலைமை ஏட்டு சண்முகப்பா, மகளிர் ஏட்டு வத்சலா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.