தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைதி, நல்லிணக்கம் பாதுகாக்க 3 மத பிரதிநிதிகள் உறுதிமொழி

 அமைதி, நல்லிணக்கம் பாதுகாக்க 3 மத பிரதிநிதிகள் உறுதிமொழி

 அமைதி, நல்லிணக்கம் பாதுகாக்க 3 மத பிரதிநிதிகள் உறுதிமொழி


ADDED : ஆக 22, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி, துாய ஆரோக்கிய அன்னை பெருவிழா, மிலாது நபி விழாவை ஒட்டி, புலிகேசி நகரில் ஒருங்கிணைப்பு மற்றும் அமைதி கூட்டம், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், கணேச உத்சவ குழு, மிலாதுநபி குழு, துாய ஆரோக்கிய அன்னை விழா குழுவை சேர்ந்த பிரதிநிதிகள், மத தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் உட்பட, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்வனைத்து பண்டிகைகளும் பரஸ்பர மரியாதை, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்துடன் அமைதியாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பண்டிகை காலங்களில் எவ்வித விரும்பத்தக்காத சம்பவங்களும் நடக்காமல் தடுக்கவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், பொது மக்களுக்கு எந்த வகையிலும் சிரமம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அமைதி, நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை காப்பதில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us