ADDED : ஆக 22, 2026 11:23 PM

ஹாசன்: ''என், 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், இது போன்ற மாவட்ட கலெக்டரை, நான் பார்த்ததே இல்லை,'' என, ஹாசன் மாவட்ட கலெக்டர் லதாகுமாரி மீது, ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா அதிருப்தி தெரிவித்தார்.
ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்த மாவட்ட கலெக்டரை, எங்கிருந்து பிடித்து வந்தனரோ தெரியவில்லை. எங்களின் வாக்காளர்கள் அதிகம் உள்ள இடங்களில், கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கு இட ஒதுக்கீட்டை மாற்றியுள்ளார்.
தாசில்தார் அனுப்பிய இட ஒதுக்கீட்டை, மாவட்ட கலெக்டர் மாற்றியுள்ளார். ஹாசன் மாவட்டத்தில் தொடர்ந்து இப்படியே நடக்கிறது. காங்கிரஸ் அரசு இருக்கும் போதே, இப்படி நடக்கிறது.
ஹாசன் மாவட்ட கலெக்டர், டிராமா மாஸ்டரை போல செயல்படுகிறார். எந்த அடிப்படையில், இட ஒதுக்கீட்டை மாற்றினார். என், 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், இத்தகைய மாவட்ட கலெக்டரை, நான் பார்த்ததே இல்லை.
மத்திய தேர்தல் ஆணைய்யத்தை, பா.ஜ.,வின் ஏஜென்ட் என, விமர்சிக்கின்றனர். ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளோம். அதற்குள் இட ஒதுக்கீடு பட்டியலை, சரி செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கு மாவட்ட கலெக்டரே பொறுப்பாளி.
இவ்வாறு அவர் கூறினார்.
