/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு நகருக்குள் 3 ரூரல் போலீஸ் நிலையங்கள்
/
பெங்களூரு நகருக்குள் 3 ரூரல் போலீஸ் நிலையங்கள்
ADDED : ஜூன் 04, 2025 12:55 AM
பெங்களூரு : பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள ஹெப்பகோடி, ஆவலஹள்ளி; பெங்களூரு தெற்கில் உள்ள கும்பலகோடு போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் விரிவடைந்து வருவதால், சமீபகாலமாக மூன்று பகுதிகளில் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
ஹெப்பகோடியில் கடந்த ஆண்டு நடந்த ரேவ் பார்ட்டியில் தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆவலஹள்ளி, கும்பலகோடில் போதை பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது.
இந்த மூன்று போலீஸ் நிலைய பகுதிகளில் குற்றங்களை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், ஹெப்பகோடி, ஆவலஹள்ளி, கும்பலகோடு போலீஸ் நிலையங்களை பெங்களூரு நகர போலீஸ் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும் என்று, அரசுக்கு தொடர்ந்து கோரி வந்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட அரசு, மூன்று போலீஸ் நிலையங்களையும் நகர போலீஸ் எல்லைக்குள் கொண்டு வர அனுமதி அளித்து உள்ளது. வரும் 6ம் தேதியில் இருந்து மூன்று போலீஸ் நிலையங்களும், நகர போலீஸ் எல்லைக்குள் வர உள்ளது.
வரும் நாட்களில் பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள விஜயபுரா, ராஜனுகுண்டே, ஜிகனி, சூர்யாநகர், மாதநாயக்கனஹள்ளி, விஸ்வநாதபுரா போலீஸ் நிலையங்களையும், பெங்களூரு நகர போலீஸ் எல்லைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.