தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு அலுவலக வளாகத்தில் 3 சந்தன மரங்கள் திருட்டு

அரசு அலுவலக வளாகத்தில் 3 சந்தன மரங்கள் திருட்டு

அரசு அலுவலக வளாகத்தில் 3 சந்தன மரங்கள் திருட்டு


ADDED : ஜூன் 28, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தார்வாட்: அரசு அலுவலக வளாகத்தில் இருந்த சந்தன மரங்களை, மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தியுள்ளனர்.

தார்வாட் நகரில், சர்வே அலுவலக வளாகத்தில் மூன்று சந்தன மரங்கள் வளர்ந்திருந்தன. இவை பத்து ஆண்டுகள் வளர்ந்தவை. 15 அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்திருந்த மரங்கள், அலுவலகத்தின் அழகை அதிகரித்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல், மூன்று சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

நேற்று காலை அலுவலக ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பது தெரிந்தது. உடனடியாக தார்வாட் நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், மரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

சர்வே அலுவலகத்தில் இருந்து, கூப்பிடும் தொலைவில் வனத்துறை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் பாதுகாப்பு ஊழியர்களும் உள்ளனர். இத்தகைய இடத்தில் சந்தன மரங்கள் கடத்தப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us