/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., கணக்கெடுப்பு பணி 3 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
/
எஸ்.சி., கணக்கெடுப்பு பணி 3 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
எஸ்.சி., கணக்கெடுப்பு பணி 3 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
எஸ்.சி., கணக்கெடுப்பு பணி 3 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 03, 2025 10:59 PM
பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.சி., பிரிவில் உள்ள 101 உட்பிரிவுகளை கணக்கெடுக்கும் பணி, மாநிலம் முழுதும் மே 5ல் துவங்கியது.
பெங்களூரில் நடந்த கணக்கெடுப்பு பணிகளின்போது, மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது மாநகராட்சி நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'ஸ்டிக்கர் ஒட்டியதால் கணக்கெடுப்பு முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை.
ஸ்டிக்கரில் உள்ள போன் நம்பர் மூலம் தொடர்பு கொண்டு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்' என, மாநகராட்சி நிர்வாகம் மழுப்பியது.
இது அதிகாரிகள் செய்த தவறை மறைப்பதற்காக மாநகராட்சி கொடுத்த விளக்கமாகவே கருதப்பட்டது.
இதையடுத்து, எஸ்.சி., சமூக கணக்கெடுப்பில் அலட்சியமாக செயல்பட்டதாக ஹெச்.பி.ஆர்., லே - அவுட் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், வருவாய் ஆட்சியர் பெட்டுராஜு, கெங்கேரி துணைப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் ஆட்சியர் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நேற்று தெரிவித்துள்ளது.