தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரில் நாளை ஜம்பு சவாரி ஊர்வலம் 3 மாநில முதல்வர்கள் துவக்கி வைப்பு

மைசூரில் நாளை ஜம்பு சவாரி ஊர்வலம் 3 மாநில முதல்வர்கள் துவக்கி வைப்பு

மைசூரில் நாளை ஜம்பு சவாரி ஊர்வலம் 3 மாநில முதல்வர்கள் துவக்கி வைப்பு


UPDATED : அக் 19, 2026 07:20 PM

ADDED : அக் 19, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 07:20 PM ADDED : அக் 19, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலம் நாளை நடக்கிறது. முதல்வராக பின், முதல்முறை சிவகுமார் துவக்கி வைக்கிறார். கேரளா, தெலுங்கானா மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வதன் மூலம், கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபினவ ஸ்ரீ கவிசித்தேஸ்வர மஹாசுவாமி விழாவை துவக்கி வைத்தார்.

மைசூரில் தினமும் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மல்யுத்தம், குஸ்தி, பெண்களுக்கான விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள், பெண்கள், விவசாய, இளைஞர் தசராக்களும் நடந்தன. நகர் முழுதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மைசூரு நகரமே விழாகோலம் பூண்டிருந்தது.

* மீன லக்னம்

இன்று மைசூரில் 10வது நாள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. நாளை ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது. இத்துடன் தசரா நிறைவு பெறுகிறது. நாளை மாலை 4:10 மணியில் இருந்து 4:35 மணிக்குள் மீன லக்னத்தில், மைசூரு அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடை மீது நின்று, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் துாவி, ஜம்பு சவாரி ஊர்வலத்தை முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார்.

முதல்வராக அவர் துவக்கி வைக்கும் முதல் ஜம்பு சவாரி ஊர்வலம் இதுவாகும். சிவகுமாருடன் இணைந்து கேரள முதல்வர் சதீசன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் ஜம்பு சவாரியை துவக்கி வைக்கின்றனர். முதல் முறையாக பிரஷாந்த் யானை, அம்பாரி சுமக்கிறது.

* அபிமன்யு யானை

கிருஷ்ணராஜா தொகுதி எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவா தலைமையில் நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வல துவக்க நிகழ்ச்சியில், துணை முதல்வர் பரமேஸ்வர், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் யதீந்திரா, கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆகியோர் மலர் துாவுகின்றனர். பிரஷாந்த் யானை தங்க அம்பாரியை சுமந்து செல்ல, பின்தொடர்ந்து மற்ற 13 யானைகளும் செல்கின்றன.

குதிரை படைகள் அணிவகுப்பும் நடக்கிறது. 2020 முதல் 2025 வரை, தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யு யானை, இந்த ஊர்வலத்தை முன்நின்று நடத்துகிறது. அந்த யானை முதலில் செல்ல, குதிரை படை, அலங்கார அணிவகுப்பு ஊர்திகள், தசரா யானைகள் பின்தொடர்ந்து செல்லவுள்ளன.

ஜம்பு சவாரி ஊர்வலம் பன்னிமண்டபத்தை அடைந்ததும், அங்கு நடக்கும் தீப்பந்த சாகசத்தை, கவர்னர் சுதா யாதவ், முதல்வர்கள் சிவகுமார், சதீசன், ரேவந்த் ரெட்டி துவக்கி வைக்கின்றனர்.

ஜம்பு சவாரியை காண கர்நாடகா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் மைசூரில் குவிந்துள்ளனர். நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us