ADDED : நவ 01, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலசந்திரா: சாக்கடையில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
நீலசந்திராவின் ஜான்சன் மார்க்கெட் அருகில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்ய, நேற்று காலையில், குடிநீர் வாரியத்தின் இரு தொழிலாளர்கள், சாக்கடைக்குள் இறங்கினர். அடைப்பை சரி செய்தபோது, விஷ வாயு தாக்கியதில் இருவரும் மயங்கினர். இவர்களை காப்பாற்ற சென்ற, மற்றொரு தொழிலாளியும் மயங்கினார். அப்பகுதியினர், தொழிலாளர்களை வெளியே அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

