sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜீப் - லாரி மோதி விபத்து 3 தொழிலாளர்கள் பலி

 ஜீப் - லாரி மோதி விபத்து 3 தொழிலாளர்கள் பலி

 ஜீப் - லாரி மோதி விபத்து 3 தொழிலாளர்கள் பலி


ADDED : பிப் 06, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கதக்: ரோனாவில் நேற்று அதிகாலை குரூசர் ஜீப்பும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதியதில், மூன்று விவசாய கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கதக் மாவட்டத்தில், கொண்டை கடலை பறிப்பதற்காக, 15 விவசாயங கூலி தொழிலாளர்கள், குரூசர் ஜீப்பில் நேற்று அதிகாலை ரோனாவுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜிகலுாரு கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த சரக்கு லாரி ஜீப் மீது மோதியது.

இதில், மரியம்பு ஹுனகுந்தா, 55, அன்னபூர்ணா சங்கலி, 45, சுஜாதா ஹொசமணி, 30, என்ற மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கு பின், சரக்கு லாரி ஓட்டுநர், அங்கிருந் தப்பியோடிவிட்டார்.

விபத்தை பார்த்த அப்பகுதியினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த ரோனா போலீசார், வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

3 வாலிபர்கள் பலி பெலகாவி மாவட்டம் ஹாரோகேரியில் நேற்று அதிகாலையில் பைக்கில் மூன்று வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் பயணித்த கஜானன் மஹாதேவ் வடயார், 22, மல்லப்பா கோலபாங்வி, 26, என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மாளப்பா, 22, என்பவர் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us