ADDED : ஏப் 30, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
தார்வாட்: காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியதில், பைக்கில் இருந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
பீதர் மாவட்டம், பால்கி தாலுகாவின், களசதாலா கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி சர்க்கரை தொழிற்சாலை அருகில், நேற்று அதிகாலை ஒரு பைக் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரில் வேகமாக வந்த கார் மீது பைக் மோதியது. மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த மூன்று வாலிபர்கள், சாலையில் பறந்து விழுந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த களசதாலா கிராமத்தின் விட்டல் பஞ்சாலா, 25, மகேஷ் பிராதர், 25, காகனாளா கிராமத்தின் ராஜேந்திர பாஞ்சாலா, 28, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
பால்கி ஊரக போலீசார், உடல்களை மீட்டு, விசாரிக்கின்றனர்.
