ADDED : டிச 19, 2025 05:01 AM
கொப்பால்: வேகமாக வந்த பொலிரோ ஜீப் மோதியதில், ஒரே பைக்கி ல் சென்ற மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.
கொப்பால் நகரின் இந்தரகி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு, பைக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த பொலிரோ வாகனம் பைக் மீது மோதியது. இதில், பைக்கில் பயணித்த வாஜீத், 17, ராஜா ஹுசேன், 17, ஆசிப், 18, என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர்.
வாஜீதும், ராஜா ஹுசேனும் கொப்பால் நகரின் ஹொசள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள். ஆசிப், கங்காவதியின் ஸ்ரீராமநகரை சேர்ந்தவர். இம்மூவரும் ஸ்ரீராமநகரில் இருந்து, ஹொசள்ளிக்கு ஒரே பைக்கில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன், கொப்பால் நகரின் ஹிட்னால் டோல்கேட் அருகே நடந்த சாலை விபத்தில், ராஜா ஹுசேனின் தந்தை புடன் சாப் உயிரிழந்தார். இப்போது மகனும் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். கொப்பால் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
