தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த பஸ் உயிர் தப்பிய 30 பயணியர்

 மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த பஸ் உயிர் தப்பிய 30 பயணியர்

 மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த பஸ் உயிர் தப்பிய 30 பயணியர்


ADDED : பிப் 07, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் இருந்து கலபுரகிக்கு சென்ற தனியார் பஸ், கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி, விபத்துக்கு உள்ளாகி தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநரின் எச்சரிக்கையால், 30 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூரில் இருந்து கலபுரகிக்கு நேற்று அதிகாலை, சஞ்சனா டிராவல்ஸுக்கு சொந்தமான பஸ் புறப்பட்டது. பெங்களூரு - துமகூரு சாலையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

நெலமங்களா தாலுகா ஹனுமந்தபுரா கேட் அருகே செல்லும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் மைய தடுப்பில் உரசி, பின் சாலை ஓரத்தில் இருந்த மின்சார கம்பத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. இதை பார்த்த ஓட்டுநர், பஸ்சிற்குள் இருந்த பயணியருக்கு எச்சரிக்கை விடுத்தார். உடனடியாக பயணியர் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினர்; சில நிமிடங்களில் பஸ் முழுதும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் தீயினால் பஸ் எலும் புக்கூடானது.

தகவல் அறிந்த தியாமகொண்டலு போலீசார் மற்றும் நெலமங்களா போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பஸ் மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டானது. இல்லையெனில், பெரியளவில் அசம்பாவிதம் நடந்திருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us