தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 30 சதவீத லஞ்ச எம்.எல்.ஏ.,க்கள்; கான்ட்ராக்டர்கள் சங்கம் 'திடுக்'

 30 சதவீத லஞ்ச எம்.எல்.ஏ.,க்கள்; கான்ட்ராக்டர்கள் சங்கம் 'திடுக்'

 30 சதவீத லஞ்ச எம்.எல்.ஏ.,க்கள்; கான்ட்ராக்டர்கள் சங்கம் 'திடுக்'


ADDED : பிப் 25, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துமகூரு: ''கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த.,வின் 30 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் லஞ்சம் வாங்குகின்றனர்,'' என, கர்நாடக மாநில கான்ட்ராக்டர்கள் சங்கத்தின் தலைவர் மஞ்சுநாத் தெரிவித்தார்.

துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நிலுவையில் உள்ள பணி பில்களை வழங்கும்படி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு பலமுறை கடிதம் எழுதியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மார்ச், 6ம் தேதி முதல் கான்ட்ராக்டர்கள் தங்கள் பணிகளை நிறுத்தி விட்டு, பெங்களூரு சுதந்திர பூங்காவில் மாநில கான்ட்ராக்டர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகிறோம். அதை தொடர்ந்து மார்ச், 8ம் தேதி ஊடகத்தினருடன் சந்திப்பு நடக்கும்.

கான்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கிய ஷிரஹட்டி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி போன்று, காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த.,வை சேர்ந்த, 30 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் லஞ்சம் கேட்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்த நிலுவை தொகையை விடுவிக்காததால், 14க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாத நுாற்றுக்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் காணாமல் போயுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், கட்சி வேறுபாடின்றி கமிஷன் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். 30 முதல் 40 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளோம். இதன் ஒரு பகுதியாகவே, ஷிரஹட்டி எம்.எல்.ஏ., பிடிபட்டுள்ளார்.

முன்பெல்லாம் வேலை முடிந்த பின், பில் செலுத்தும் போது கமிஷன் பெற்று வந்தனர். இப்போது, பணிகள் துவங்குவதற்கான பூஜை நடக்கும் போதே, கமிஷன் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டு, கான்ட்ராக்டர்களுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்துகின்றனர்.

முந்தைய அரசில், 40 சதவீதம் கமிஷன் இருந்ததாகவும், இந்த அரசில், 60 சதவீதம் கமிஷன் இருப்பதாகவும் நான் கூறவில்லை. என் வார்த்தை திரிக்கப்பட்டு உள்ளது. எங்களின் ஒரே கோரிக்கை, நிலுவையில் உள்ள 37 ஆயிரம் கோடி ரூபாய் பில் தொகையை வழங்க வேண்டும். இவ்விஷயத்தில், முதல்வர் எங்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஒத்தி வைத்து கொண்டே செல்வதால், பெரும் தலைவலியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us