/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாவட்ட வக்கீல் சங்க நிர்வாகத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் பதவி
/
மாவட்ட வக்கீல் சங்க நிர்வாகத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் பதவி
மாவட்ட வக்கீல் சங்க நிர்வாகத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் பதவி
மாவட்ட வக்கீல் சங்க நிர்வாகத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் பதவி
ADDED : மார் 25, 2025 01:32 AM
'கர்நாடகா முழுதும் உள்ள மாவட்ட வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாக குழுவில், பெண் வக்கீல்களுக்கு 30 சதவீதம் பதவிகள் ஒதுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் தீக் ஷா அம்ரிதேஷ் தாக்கல் செய்த மனுவில், 'கர்நாடகாவில் மாவட்ட வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாக குழுவில், பெண்களுக்கு பதவி ஒதுக்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
30 சதவீதம்
இம்மனு நேற்று நீதிபதிகள் சூர்யா கந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய இருவர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல், 'நடப்பாண்டு ஜனவரியில், பெங்களூரு வக்கீல்கள் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில், சங்க பொருளாளர் பதவியை, பெண் வக்கீல்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதை ஏற்றுக் கொண்ட பெங்களூரு வக்கீல் சங்கமும், தங்கள் நிர்வாகத்தில் 30 சதவீதம் பெண் வக்கீல்களுக்கு ஒதுக்கி உள்ளது' என்றார்.
பின் நீதிபதிகள் கூறியதாவது:
ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவு, கர்நாடகாவின் அனைத்து மாவட்ட வக்கீல்கள் சங்கத்திற்கும் பொருந்தும். இச்சங்கங்களில் 30 சதவீதம் பெண் வக்கீல்களுக்கு பதவி வழங்குவதுடன், பொருளாளர் பதவியை பெண்களுக்கு தான் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து சங்கங்களும் அறிக்கை தயாரித்து, மாவட்ட செஷன்ஸ் நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டனர்.
- நமது நிருபர் -