தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராபர்ட்சன்பேட்டை குடோனில் 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

 ராபர்ட்சன்பேட்டை குடோனில் 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

 ராபர்ட்சன்பேட்டை குடோனில் 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : மே 17, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 12:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த, 2022 ஜூலை 1 முதல் 100 மைக்ரானுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்ற தடை உத்தரவு அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், மண்வளம் பாதிக்கிறது. கால்நடைகள் பிளாஸ்டிக்குகளை தின்பதால் அவைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பிளாஸ்டிக் பைகளை விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால் பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தங்கவயல் நகராட்சி பகுதியில், தடை செய்யப்பட்ட மெல்லிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாதென பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆயினும், கடைகளில் பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

தங்கவயல் நகராட்சி சுகாதார தலைமை அதிகாரி மங்களகவுரி தலைமையில் நேற்று மதியம் நடந்த சோதனையில் ராபர்ட்சன்பேட்டையின் பவரிலால்பேட்டையில் ஒரு குடோனில் 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த விடாமல் அவைகளை பறிமுதல் செய்து வருகிறோம்.

இது வரை தங்கவயலில் 6,000 கிலோவுக்கும் அதிகமாக பறிமுதல் செய்துள்ளோம். மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு பணியை தொடர்ந்து செய்வோம். அபராதமும் விதிக்கப்படும். வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us